4 முறை நிச்சயதார்த்தம் முறிவடைந்ததால் விரக்தியில் நாயை திருமணம் செய்துகொண்ட பெண்!!
4 முறை நிச்சயதார்த்தம் முறிவடைந்ததால்  விரக்தியில் நாயை திருமணம் செய்துகொண்ட பெண்!!

லண்டனில் எலிசபெத் ஹோட் என்ற பெண் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பதற்காக அங்குள்ள பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்றார். அங்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது லைவ் ஷோவாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொடங்கியது. லைவ் ஷோவைப்பார்க்க தொலைக்காட்சி முன் ஏராளமானோர் குவிந்தனர். 


அப்போது `லோகன்' என்ற நாயை எலிசபெத் ஹோட் அறிமுகப்படுத்தி, மோதிரம் மற்றும் ப்ரேஸ்லெட் மாற்றி எலிசபெத் திருணம் செய்துகொண்டார்.  இதனை சற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி தொகுப்பாளர் இது குறித்து கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த  எலிசபெத்  `நான்கு முறை நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நின்றுபோனநிலையில், நாயைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். 

நான் லோகனை காணும் முன்வரை உடைந்து போயிருந்தேன். என்னை லோகன் காப்பாற்றியது, நான் அதை காப்பாற்றினேன் என்றார்.  ஒருவருடத்துக்கு முன்புதான் அந்த நாயை எலிசபெத் வாங்கியுள்ளார்.  மேலும் ``என்னுடைய நண்பர்கள் பலரும், ஆண்களைக்காட்டிலும் நாயைத் திருமணம் செய்துக்கொள்ளலாம் என விரும்பியிருக்கிறார்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. `அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி தேவை' என்றெல்லாம் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்