உயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை. அதன் பெறுமானம் எவ்வளவு தொியுமா?
உயர்ந்து கொண்டே செல்லும் தங்கம் விலை. அதன் பெறுமானம்  எவ்வளவு தொியுமா?

சென்னை:


தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

 

இன்று சவரனுக்கு ரூ. 264 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 27 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ. 3,416 ஆக உள்ளது.


ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் 3 நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.848 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் பெண் பிள்ளைகள் வைத்திருப்போர் கலக்கத்தில் உள்ளனர். 


வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 500-க்கும், ஒரு கிராம் ரூ. 44.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்