இந்தியா கேரளாவில் தொழிலாளி வயிற்றில் இருந்த 111 ஆணிகள் ஆபரேஷன் மூலம் அகற்றம்
இந்தியா கேரளாவில் தொழிலாளி வயிற்றில் இருந்த 111 ஆணிகள் ஆபரேஷன் மூலம் அகற்றம்

திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

 

அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அந்த நோயாளியின் வயிற்றில் ஆணிகள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்ததால் உடனடியாக ஆபரே‌ஷன் செய்யவும் டாக்டர்கள் முடிவு செய்தனர்.


அதன்படி திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்து 111 ஆணிகளை டாக்டர்கள் அகற்றினார்கள்.


அவரது வயிற்றில் 111 ஆணிகள் எப்படி வந்தது? என்பது பற்றி அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கேட்டனர். கூலி தொழிலாளியாக பணியாற்றியபோது கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரை உறவினர்கள் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர்.


ஆனாலும் வீட்டில் உள்ளவர்களை ஏமாற்றிவிட்டு வீட்டை விட்டு அடிக்கடி அவர் வெளியே சென்று விடுவார். அப்போது சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை எடுத்து விழுங்கி உள்ளார்.


10 வருடங்களுக்கு மேலாக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார். சமீபத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகே இது உறவினர்களுக்கு தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com