நகைச்சுவை துணுக்கு - சிாிங்க
நகைச்சுவை துணுக்கு - சிாிங்க

[021]

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?


ஆண்: ஆமா!


பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?


ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…


பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?


ஆண்: சரிதான்…


பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?


ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.


பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?


ஆண்: சரிதான்…


பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….


ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?


பெண்: ச்சே ச்சே நோ நோ…!


ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!


பெண்: _________________________________


—————————————————————————————-

[022]


“அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு.” “எப்படி சொல்றீங்க?”

“வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு இருக்குதே.”


—————————————————————————————-

[023]

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”


இவன் : “ஓ மை காட்! .. ரம்யா ?”


அவள் : “இல்லை”


இவன் : “கீதா ?”


அவள் : “இல்லை”


இவன் : “உமா ?”


அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை


—————————————————————————————-

[024]

பொண்ணு மொபைல்ல பேலன்ஸ் இருந்தாஅவளுக்கு பாய் பிரெண்ட் இருக்கான்னுஅர்த்தம்..


பையன் ­ மொபைல்ல பேலன்ஸ் இருந்தா அவனுக்கு இன்னும் கேர்ள் பிரெண்ட் இல்லைன்னு அர்த்தம்…


—————————————————————————————-

[025]

காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே?!

காதலி: ஆமாம் அன்பே..

காதலன்: அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..?

காதலி: மாட்டேன்.. என்னுடையது இறவா காதல் அன்பே..


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com