வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கம், ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.2048 அதிகரித்துள்ளது.
வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கம், ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.2048 அதிகரித்துள்ளது.

சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத அளவு விலை உயர்ந்து ரூ.28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.71 உயர்ந்து ரூ.3544-க்கும், சவரன் ரூ.28,352-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 14 டாலர் உயர்ந்து 1485 டாலராக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. ஆபரண தங்கத்தின் விலை கடந்த ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ.2048 அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் கிராம் விலை ரூ.255 அதிகரித்து உள்ள நிலையில் மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.3487க்கும், ஒரு சவரன் ரூ.27,896-க்கும் விற்பனை ஆனது. மேலும் கடந்த சனிக்கிழமை முதலே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. ஜூன் மாதம் ரூ.26 ஆயிரத்தையும் தாண்டியது. ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம் ரூபாயையும் கடந்து 28 ஆயிரத்தை நோக்கி சென்றது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com