நகைச்சுவை துணுக்கு - சிாிங்க
நகைச்சுவை துணுக்கு - சிாிங்க

[026]


லண்டன் விமானக் கம்பெனி ஒன்றின் விளம்பரம்:

”இப்போது போகலாம்,பிறகு பணம் கொடுக்கலாம்.”

அருகில் சவப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியின் விளம்பரம்:

இப்போது பணம் கொடுக்கலாம்.எப்போது வேண்டுமானாலும் போகலாம்.


—————————————————————————————-


[027]


ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு நாய் பலமாகக் குரைக்கும் சப்தம் கேட்டது.அதனால் மேற்கொண்டு நடத்த முடியாமல் அமைதியாக இருந்தார்.சிறிது நேரம் கழித்து நாய் அமைதியானது.

மாணவன் ஒருவன் சொன்னான்,”ஐயா,நாய் நிறுத்தி விட்டது.நீங்கள் ஆரம்பியுங்கள்.”—————————————————————————————-

[028]


தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?

என்ன செய்வாங்க ?

முழிச்சிருப்பாங்க


—————————————————————————————-


[029]


ஐய்யா சாப்பாட்டைக் கண்ணால பார்த்து நாலு நாள் ஆச்சுங்க.. .

ஒரு அஞ்சு நிமிஷம் இரு… இப்ப நான் சாப்பிடப் போறேன்… பார்த்துட்டுப் போய்டு


—————————————————————————————-

[030]

நீதிபதி : உன்னை மாதிரி ஆளுங்களாலே இந்தச் சமுதாயத்திற்கு ஒரு உபயோகமும் இல்லை.


குற்றவாளி : இப்படி சொல்லிட்டீங்களே,ஐயா!! என்னை மாதிரி ஆளுங்களாலேதான் இங்க இருக்கும் ஏட்டய்யா, வக்கீலுங்க, இந்தக் கோர்ட்டில் இருக்கும் எல்லோருக்கும், ஏன் உங்களுக்குக் கூட வேலை கிடைச்சிருக்கு.

—————————————————————————————-


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com