தாயின் ஏக்கம்....
தாயின் ஏக்கம்....

நீ அழுத போது உன்னை தரதரவென்று இழுத்துப் போய் பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன் படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்

இன்று நான் அழுகிறேன் என்னை இழுத்துப் போய்

முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே

அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று

பத்துமாதம் உன்னை வயிற்றில் சுமந்தபோது பாரமாக

நான் நினைக்கவில்லை..

உன் பத்தினி வந்ததும் உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக

இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே


நீ ஓடி ஓடி விளையாடிய போது நீ செல்லும் இடமெல்லாம்

உன் பின்னாலே வந்து உனக்கு சோறு ஊட்டி

உன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...

 எனக்கு வயிறாற உணவு வேண்டாம்..

ஒரு வேளையானலும் உன் வீட்டு சோறு போதும்...

உன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து

படிக்க வைத்து,கல்யாணம் முடித்து

நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....

என் எதிர்காலத்திற்காக நான் சாவதற்கு என்னை நீ

பார்த்துக் கொள்ளக் கூட மறுக்கிறாய்....

பிள்ளையேப் பெறாமல் இருந்திருந்தால் மலடியாகிருப்பேன் யாருமே இல்லாதிருந்தால்

அனாதையாகிருப்பேன்...

பிள்ளைகளைப் பெற்றும் இன்று நான் முதியோர் இல்லத்தில்....


நான் மலடியா...

நான் அனாதையா...

தாயின் ஏக்கம்.... 


..நன்றி யாரோ ஒருவன் !


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com