இயற்கை
இயற்கை

மரங்களுக்கு கிளைகள் தெரியாது

இலைகள் எப்போதும் இருப்பது

பிடிக்கவில்லையாம் ! கொஞ்சம்

தலை பாரம் இறக்கி , மொட்டை அடித்த

மனிதன் போல வாழ நினைத்ததாம்

இயற்கையிடம் இதற்காக வேண்டி நின்றனவாம்

மரங்கள்- இவ்வளவுதானே, கவலை விடுங்கள் மரங்களே

என்று பருவத்தில் இலையுதிர்க் காலம் கொண்டுவந்ததாம்

இயற்கை........

இலையுதிர்க் காலத்து மொட்டை மரம் ஒன்று

இதை என் காதில் வந்து மெல்ல சொன்னது


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com