போற போக்குல
போற போக்குல

மகள்- வாங்க சித்தப்பா என்ன திடீர்னு?

சித்தப்பா- இல்லம்மா ஊருக்கு ஒரு விஷயமாக வந்தேன்.அப்படியே போற போக்குல உன்னை ஒரு எட்டு பார்த்துட்டு போயிடலாம்னு. அது சரி மாப்பிள்ளை எங்கே கிளம்பி ரெடியா இருக்கார்?

மகள்- அவர் போற போக்குல உங்களை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடலாம்னு

கிளம்பி ரெடியா இருக்கார்.

மருமகன்-போற போக்குல என்னை ஏண்டி கோர்த்து விடுற. ஒரு நாள் தங்கி இருந்துட்டு போகட்டுமே?

மகள் - இந்தாங்க உலகம் போற போக்குல அவங்கவங்க போற போக்குல விட்டறனும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தெரியுதா?


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

www.lanka4tv.com