80வது அகவை நிறைவு நாளில் வாழ்வாதார உதவி.
80வது அகவை நிறைவு நாளில் வாழ்வாதார உதவி.

உலகின் பல பாகங்களிலும் உள்ள பலரின் உயர்வுக்கு ஏணியாக திகழ்ந்தவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த ஆசிரியரும் கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழருமான திரு ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் 80வது அகவை நிறைவு நன்நாளான(20-12-2019) தாயகத்திற்காக நீண்ட காலம் பணியாற்றி உடல் முழுவதும் பல விழுப்புண்களுடனும் ஒரு கால் பகுதியளவில் பாதிக்கப்பட்டும் வயோதிப தாயாரின் தோட்ட வேலை வருமானத்திலே மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனுடனும் பொருளாதார கஷ்டத்துடன் வாழும் முன்னாள் போராளிக்கு தினமும் 6லீற்றருக்கு மேல் பால் தருகின்ற நல்லிண பசுவைக் கன்றுடன் வழங்கியும் அதற்கான கொட்டகை அமைத்துக் கொடுத்தும் அவற்றிற்கான தீவனங்களை வழங்கியும் இனி இவர்கள் ஓரளவு சிறப்பான வாழ்வியலை வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

இதேவேளை இவர்களின் பகுதி வெள்ளம் நிற்கும் பிரதேசம் ஆகையால் கொட்டகைக்கு சீமெந்து நிலம் அமைத்தும் கொடுத்துள்ளார். அவ்வகையில் ஆசிரியர் வே.பஞ்சாட்சரம் அவர்கள் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் பலருக்கு வழிகாட்டியாக வாழ உளமார வாழ்த்தி இறைவனை வேண்டுகிறோம்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube