அடுத்த தலைமுறையை அழிக்கும் மீன்!
அடுத்த தலைமுறையை  அழிக்கும் மீன்!

தேளி மீன், தேளிவரால், பொய் மீன்,பூவிரால், ஆப்ரிக்கன் கெளுத்தி என்றெல்லாம் ஊருக்கு ஒவ்வொரு பெயர்களில் அழைக்கப் படுகிறது கீழ்காணும் மீன்.

இந்த மீனின் பூர்வீகம் ஆப்ரிக்கா. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் தண்ணீர் உள்ள பகுதிகளில் எல்லாம் இந்த மீன்கள் தாராளமாய் வளர்க்கப்படுகின்றன.

இந்த மீன்கள் அசைவ உணவு மட்டுமே உண்ணும்.

கோழி கழிவு, செத்த நாய் என்று இறந்த எல்லாப் பிராணிகளும் இவற்றின் உணவாகும். செத்தவற்றை தின்றுவிட்டு செழிப்பாய் வளரும். குறைந்த செலவில் கொழுத்து வளரும் இந்த மீன்களால் வளர்ப்போருக்கு கொள்ளை லாபம்.

மீன் கடைகளில் விற்பதிலேயே இதன் விலைதான் குறைவு. கிலோ ரூ 120 மட்டுமே. அத்தனை மீன்களும் ஐசில் விறைத்துப் போயிருக்கும். இந்த மீன் மட்டும் மீன்கடையில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்.

விலை குறைவாகவும், உயிரோடும் இருப்பதால் இந்த மீன்களை அசைவப் பிரியர்கள் அள்ளிச் செல்கிறார்கள்.

ஆனால் ஆபத்து என்ன தெரியுமா?

ஆண்களுக்கு ஆண்மை குறைவை ஏற்படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டால் அடுத்த தலைமுறையே இருக்காது. இதய நோய், புற்று நோய், தோல் நோய்களின் நுழைவு வாயில்.

இதன் ஆபத்தை அறிந்து பல நாடுகள் இந்த மீன்களை தடை செய்துவிட்டன. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் நாட்டில் திருட்டுத் தனமாய் இந்த மீன் வளர்ப்பு ஜேஜே என்று நட க்கிறது. மீன் கடைகளில் கூவிக்கூவி விற்கிறார்கள்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா? ஆடிக்கொருமுறை ,ஆமாவாசைக்கு ஒருமுறை எடுக்கிறார்கள்.

நேற்றும், இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய ஊர்களில் இந்த மீன்கள் வளர்த்த பண்ணைகளை அதிகாரிகள் புல்டோசர்களைக் கொண்டு இடித்து மூடினார்கள்.

"ஆப்ரிக்கன் கெளுத்தி மீன் பண்ணைகள் அழிப்பு" என்ற தலைப்பில் அந்த செய்தி சேலம் பதிப்பு செய்தித்தாள்களில் மட்டுமே பிரசுரமாகி இருந்தது.

அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை இல்லை. போதிய விழிப்புணர்வு இல்லை.

"தேளி மீன்" என்று இணையத்தில் தமிழில் எழுதிப் பாருங்கள். ஆபத்து அத்துபடியாகும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube