பொன்னியின் செல்வன்,
பொன்னியின் செல்வன்,

இந்த நாவலை படித்தவர்கள், கண்டிப்பாக சில காலம் இந்த கதையின் உலகத்திலே வாழ்வார்கள், காரணம் கல்கி, சின்ன வயதிலே இருந்து கதைகள் படிக்க ஆர்வம்,என் தந்தை சிறந்த கதை சொல்லுவதில் வல்லவர்,அவரிடம் என்னற்ற கதை புத்தகங்கள் படிப்பவராகவும், தினமும் டைரி எழுதும் பழக்கமும் உடையவர், (அதை படிக்கும் போது அன்றாட வாழ்க்கையை அழகான விவரித்து இருப்பார்)

என் தாயை மணந்த பின் அனைத்திற்கும் தடை, ஆனால் என தந்தை எங்களுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை எனது ஆறு வயதிலே தூண்டிவிட்டார், ஓவ்வொரு வெள்ளி கிழமையையும் சிறுவர்மலர்(தினமலர்) தங்கமலர்(தினதந்தி) இரு நாளிதலில் வரும் இலவச புத்தகங்களை கொடுத்து படிக்க வைப்பார், அதை படித்து முடித்த பின் தான் பள்ளிகூடமே செல்வேன்...

எனக்கு நல்ல நினைவில் இருக்கிறது எனது பத்து வயதில் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க புத்தகத்தை கொடுத்தார், மிகவும் கணமான புத்தகம், அதை படிக்க வெகு காலம் ஆகும் எழுத்து கூட்டி படிக்க வேண்டும் என்று புறகணித்தேன்,

(நான் செய்த மிகப்பெரிய தவறு, அதை பல வருடங்களுக்கு பிறகே உணர்ந்தேன்)

என் தமைக்கை ராஜேஷ்குமார் நாவலின் தீவிர விசிறி, நான் எட்டாவது படிக்கும் போது அந்த நாவலில் என்ன இருக்கிறது என படிக்க அரம்பித்தேன், எனது பத்தாவது வகுப்பு முடிக்கும் முன்பே நெல்லை பேட்டை லைப்பேரியில் இருக்கும் நூலகத்தில் உள்ள அனைத்து ராஜேஷ்குமார் நாவலை படித்துவிட்டேன் (2821) என்கிற எனது நூலக எண்ணும், அந்த நாவலில் பின் புறத்தில் வாசகர் கருத்தில் எனது கருத்தும் பதிவது வழக்கம்,

காலங்கள் செல்ல செல்ல சுஜாதா, சுபா, ரமணிசந்திரன், ஜெயகாந்தன், பாலகுமாரன், என என்னற்ற எழுத்தாளர் நாவல்களை படிக்க அரம்பித்தேன் (1996 முதல் 2008 வரை) பேட்டை நூலகத்தில் நான் படிக்காத நாவல்கள் குறைவு,

காலை எட்டு மணி முதல் 11 மணி வரை தான் பின் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தான் நூலகம் வேலை நேரம், ஆனால் நான் ஞாயிறு காலை எட்டு மணிக்கு செல்லுபவன். மாலை ஆறு மணி நேரம் இருப்பேன், (உணவு உண்ண மட்டும் வீட்டிற்கு செல்வேன்) எனக்கு மட்டும் தனி அனுமதி வழங்கினார் அந்த அரசு நூலகத்தின் பொறுப்பாளான சுவாமி ஐயர்,

சின்ன வயதில் அந்த நூலகத்தின் ஆபிஸ் பாய்கவே இருந்தேன் அவர்அந்த நூலகத்தின் பொறுப்பாளாக இருக்கும் வரை,

வேலைக்காக சென்னை வந்த போது புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பும் நின்றது, வாயப்பும் அமையவில்லை, 2010ல் அவ்வாய்ப்பு பிரித்திவிராஜ் என்கிற சக பணியாளர் மூலமே கிடைத்து,

ஆம் என் புத்தக ஆர்வத்தை அறிந்து எனக்கு பொன்னியின் செல்வன் நாவலை தந்தார், தினமும் ஒரு பாகத்தை தருவார்,ஐந்தே நாளில் ஐந்து பாகத்தை படித்து முடித்தேன், இதில் எட்டு மணி நேரம் வேலை தூக்கமும் அடக்கம்,

அவரே வியந்தார் என்எனில் ஊண், உறக்கம் மறக்கடித்து அந்த நாவலை படித்து முடிக்கவேண்டும் என்கிற பித்தம் தான் பிடித்து, என்வொரு எழுத்து, நான் படித்த நாவலில் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு நாவலை என் வாழ்நாளில் படித்தே இல்லை,

அப்படி என்ன தான் அந்த நாவலில் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டுமானால் அந்த நாவலை படித்தால் மட்டுமே உணர முடியும்,

அந்த நாவல் மணிரத்தனம் திரையில் காட்ட போகிறார், அதில் கண்டுகொள்ளுவோம் என கருதுபவர்களுக்கு, ஒரு செய்தி

நிச்சியமாக அந்த நாவலில் இருக்கும் எழுத்து வடிவத்தை அதன் உணர்வை திரையில் காட்டவே முடியாது,

சரித்திர படங்களை சிறப்பாக எடுத்த எம்.ஜி.ஆர் அவர்களே தோல்வியுற்றார், இது அவரது கனவு படம் கூட, வந்திய தேவன் என்கிற பாத்திரம் ஆச்சி அசலாக எம்.ஜி.ஆர் அவர்களுக்கே சரியாக பொருந்தும் என்பது என் எண்ணம்..

பொன்னியின் செல்வன் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

பொன்னியின் செல்வனை படித்தவர்கள், பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை கண்டிப்பாக படியுங்கள், பொன்னியன் செல்வன் இரண்டாவது பாகமாக இது இருக்கும், தஞ்சை பெரிய கோயில் கட்டபட்ட வீதம் பற்றி தான இக்கதையின் கரு..

இந்த இரு நாவல்களுக்கு இணைப்பு பாலமாக காவியதலைவன் என்கிற சின்ன நாவலை எழுத அரம்பித்து தோல்வியுற்றேன், இறைவன் நாடினால் மீண்டும் தொடர்வேன்...


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube