புத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்
புத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்

புத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

பிறக்கப்போகிற புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன. இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும்.

இன்றைய அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகத்தான் நாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.

உதாரணமாக 1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவது மரபாகவும் பின்பற்றப்படுகிறது. ஆனால் இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtube