பேஸ்புக் பிரச்சனை.. 27 கோடி தொடர்பு எண் இணையத்தில் கசிவு - பேஸ்புக் விசாரணை
பேஸ்புக் பிரச்சனை..  27 கோடி தொடர்பு எண் இணையத்தில் கசிவு - பேஸ்புக் விசாரணை

உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் அமெரிக்காவையே நடுங்க வைக்கும் ஒரு ஊடகம் என்றால் அது பேஸ்புக் நிறுவனமே. அதுவும் ஒரு அமரிக்கரின்  நிறுவனமே என்றால் மிகையாகாது.

அந்த நிறுவனத்துக்கே ஒரு சட்ட பிரச்னை என்றால் சிந்திக்க வேண்டியதுதான்.  இது சதியா அல்லது உண்மையா என தெரியாமல் முகநூல் பயனாளிகள் திண்டாடிகிரார்கள். அந்த வகையில் 

27 கோடி ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணையத்தில் தகவல்களைத் திருடும் ஹேக்கர்களின் குழு ஒன்றில் இந்த தரவுகள் வெளியானதாகத் தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் பயனர்களின் பெயர், தொலைபேசி எண், ஃபேஸ்புக் முகவரி ஆகிய தகவல்கள் எல்லோரும் பார்க்கும் வகையில் ஹேக்கர்களின் இணையப்பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.

இதுகுறித்து தாங்கள் விசாரித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த தகவல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு தற்போது வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும் ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube