பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

கூடைப்பந்து விளையாட்டு உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த கோப் பிரயண்ட்(வயது 41). இவர் 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரரான இவர் ஒலிம்பிக்கில் இருமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 65 கி.மீ தொலைவில், நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோப் பிரயண்ட், அவரது மகள் ஜியானா(வயது 13) உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை அதன் பைலட் நிலைமை சீராக உள்ளதாக, தரை கட்டுப்பட்டு தளத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார். இருப்பினும் இந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப் பிரயண்டின் மரணம் உலக அளவில்  அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பிரயண்டிற்கு வான்சா என்ற மனைவியும், விபத்தில் உயிரிழந்த ஜியானா உள்பட 4 மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube