யார் இந்த பங்காரு அடிகளார்..?
யார் இந்த பங்காரு அடிகளார்..?

யார் இந்த பங்காரு அடிகளார்...என்று நாம் கேள்வி கேட்பதற்கு முன்னர். இவரால் என்ன சேவைகளை செய்துள்ளார் என்பதையும் இணைத்து உற்று நோக்கல் அவசியம். வெறும் புற சுற்றத்தை பார்த்து மல்லிகை பந்தலா அல்லது வாடாமல்லிகை பந்தலா என்று பார்ப்பது வெறும் ஒற்றைக் கண் உள்ளவர்களின் நோக்கு. எத்தனையோ ஆன்மீக குழுக்கள் உலகெங்கும் பரவி கிளை விரிதிருந்தாலும், ஏன் பங்காரு அடிகளாரின் முற்றத்தில் இவ்வளவு கூட்டம்,,, என்னை பொறுத்தவரையில் பங்காரு அடிகளாரின் முற்றத்தில் ஆன்மிகம் அதிக விலை விற்கபடவில்லை. மாறாய் சன்மான்ய மனிதரிற்கு ஏற்றால்போலவும் , அதுவும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழ் அடியார்களிற்கு ஏற்றால் போலவும், மற்றும் மக்களின் தேவை என்னவோ அந்த முறையில் ஆன்மிகம் கிடைக்கிறது. 

அப்படி என்னதான் கிடைக்கிறது என்ற கேள்விக்கு , அங்கே எல்லாம் கிடைக்கிறது, தோஷங்கள் நிவர்த்தியாகிறது, பஞ்சம் போக வழி பிறக்கிறது, குழந்தை பாக்கியம், தீராத சில நோய்கள் தீருகிறது, அப்படியானால், சக்கி வாசுதேவு, நித்தியானந்தா ரவிசங்கர் இவர்களிடம் இல்லையா என்றால் அங்கே அதிகமான வசதி படைத்தவர்களும், வெளிநாட்டுகாரர்களிர்க்கும்தான் அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் அங்கே ஆன்மிகம் அதிக விலையில் விற்க்கபடுகிறது. 

அத்தோடு நவீன உலகிற்கேற்ற ஆன்மிகம் அதுவே தவிர, ஏன் பங்காரு அடிகளாரிற்கும் பணம் கொட்டுகிறதே என்றால் அது கொட்டப்படவில்லை கொடுக்கப்படுகிறது. காரணம் மக்களின் திருப்த்தியால். அனால் அந்த குழுமம் வெளியே பக்தர்கலாலேயோ அல்லது, அதற்கும் காரணம் அவர்களால் செய்யப்படும் உன்னத பொது சேவை, ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்களை விளம்பரம்போட்டு, அல்லது சன்மானம் கொடுத்து அழைக்கவில்லையே மாறாய் பக்தர்கள் தங்கள் திருப்தியை அடுதவர்களிற்கு பகிர்வதால் கூட்டம் அலை மோதுகிறது. 

என்னதான் அங்கே நடக்கிறது. ஒன்றுமில்லை அங்கே ஓதப்படும் மந்திரங்களின் ஒலியால் மனகள் உடல், உள்ளம், உடல் நரம்புகள் உருவேருகிறது, பின்னர் அங்கே போகும் பக்தர்கள் ஆழ்நிலை தியானத்திற்கு செல்கின்றார்கள், அப்போ எதை வேண்டி செல்கிறார்களோ அது பிரபஞ்ச வெளியிலிருந்து கொடுக்கப்படுகிறது. ஒருவரல்ல ஆயிரகணக்கான பக்தர்கள் இங்கே மந்திர தியானம் செய்வதால் ஒருவரிற்கு கிடைப்பது மற்றவர்களிற்கும் கிடைக்கிறது. அதுதான் கேட்ட வரம் கிடைத்த திருப்தியை பக்தர்கள் அடைகிறார்கள். 

இது ஏன் மற்றைய ஆன்மீக கோவில்களிலேயும் ஆச்சிரமங்களிலேயும் இவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை என்றால். இவ்வளவு மந்திரம் மற்ற இடங்களில் ஆக்ரோஷமாக ஓதப்படுவதில்லையே. அத்தோடு மிகப் பெரிய ஜெதார்த்த உண்மை அங்கே அவர்களும் பீடத்தால் கொடுக்கப் படும் அல்லது செய்யப்படும் தொண்டுகள், சேவைகளால் சேவையை பெரும் நோயாளிகளோ, வறியவர்களோ சந்தோஷப்படும்போது அந்த வாழ்த்தின் அலை அதாவது கடாட்சம் அந்த பீடத்தில் மோதிக்கொண்டு இருப்பதால்தானேயாகும். இப்போ பத்மபூசணி விருதுக்கு வருவோம், கமலகாசநிற்கும், கவி பாடும் வைரமுத்துவிற்கும்  கண்ட கண்டவரிர்க்கும் கொடுப்பதை விட இவ்வளவு மக்களின் பல குறைகள் தீர ஒரு குடிசை அமைத்த இந்த பங்காரு சித்த அடிமைக்கு கொடுப்பதால் என்ன குறைந்து விட்டது. பா ஜா கா ஒன்றும் தெரியாத முட்டாள் கூட்டம் அல்ல. அவர்களிற்கு ஆன்மீகமும் தெரியும் , அனுமானின் வாலால் இலங்கை எரித்ததுபோல அழிக்கவேண்டிய துஸ்ட சக்திகளை அழக்கவும் தெரியும். உங்களாலும் முயும் , சிறிதளவானாலும், செய்வோம் எம்மையும் எமக்கு தெரியாமலே பல உள்ளங்கள் வாழ்த்தும். 

அதை விட எமது சந்ததிக்கு அழியாமல் சேர்க்கும் சொத்து எதுவும் இல்லை. இந்த பங்காரு குடும்பம், குழும, கூட்டம், செய்யும் சேவைகள் அவர்கள் சந்ததியை காக்கும் என்பது நிச்சயம். ஆதிபராசக்தி பீடத்தில் ஒன்றுமே இல்லை, ஆனால் எல்லாம் இருக்கிறது, தேவைப்படுபவன் எடுக்க தெரிந்தவன் எடுத்துக் கொள்வான். ஏன் எங்கே ஆதி பராசக்தி முற்றம் இருந்தாலும் வேண்டுதலோடு, நல்ல தான எண்ணத்தோடு, சுத்தமான மனதோடு போய் பாருங்கள் புரியும், ... பங்காரு அடிகளாருக்கு பத்மபூசணி விருதை கொடுத்தால் பத்மபூசணி விருது தமிழகத்தில் பரிசுதமாகியுள்ளது என்பது ஆதிபராசக்தி மன்றங்களிற்கு போகின்ற பலருக்கு புரியும், எதையும் அசைபோட்டு ஆராய்ந்து அனுபவித்து கூறினால் உண்மை, இல்லையேல் அக்கருத்து விட்டிலின் வாழ்வுபோன்றாகிவிடும். 

இந்த பதிவு யாரையும் வக்காளத்து வாங்கியோ உதாசீனம் செய்தோ அல்ல அனுபவித்ததால் உணர்ந்தேன் அனுபவித்து உணர்ந்தேன். எந்த சேவையிலும் சில தவறுகள் வரத்தான் செய்யும் காரணம் இது கலிகாலம். அதனால் நிறைவை நிறை போடாமல், குறைகளிற்கு கொடி கட்டாமல் வாழ கற்றால். சென்ற இடமெல்லாம் சிறப்பு , விருப்பாக அமையும். மன்னிக்கவும். சக்தி மந்திரமென்ன நல்ல வீட்டில் ஓதக்கூடிய கடாட்ச மந்திரத்தை ஓதுங்கள் சில மணி துளிகளாவது தியானம் இருங்கள் மற்றவரோடு பேசாமலே ஆழ் மனத்தால் அனைத்தையும் பேசலாம், அம்மனோ சித்தர்களோ மகான்களோ, பிள்ளையாரோ, ஆஞ்சநேயனோ, தியானத்தில் உங்களோடு பேசுவார்கள். இது கலியுகத்திலும் சாத்தியம். முயலுங்கள் முடியும். மனித நேயத்தை கடைபிடிப்போம் மனிதனாக வாழ்வோம்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube