தோரணமலை முருகன் கோவிலில் 8-ம் தேதி தைப்பூச விழா
தோரணமலை முருகன் கோவிலில் 8-ம் தேதி தைப்பூச விழா

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் தைப்பூச விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் கணபதி ஹோமமும், அதனை தொடர்ந்து சுவாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள சப்த கன்னியர்கள், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, நாகர் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. அதேபோல் மலை உச்சியில் உள்ள பத்ரகாளியம்மன் மற்றும் குகையில் உள்ள முருகருக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருச்சி துறையூர் அகத்தியர் சன்மார்க்க சங்கமும், கோவில் நிர்வாகமும் இணைந்து 1008 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பாவூர்சத்திரம், ஆவுடையானூர், முத்துமாலைபுரம், சிவநாடானூர், திப்பணம்பட்டி, அரியப்பபுரம் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வருகின்றனர்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtube