விரைவில் மாஸ்டர் ஆடியோ வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்
விரைவில் மாஸ்டர் ஆடியோ வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மாஸ்டர் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். விஜய் சேதுபதியும், விஜய்யும் இணைந்து நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே வருமானவரி அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து விஜய்யை அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்ற சம்பவம் விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை வருத்தத்தில் இருந்து மீட்கும் விதமாக “மாஸ்டர்” ஆடியோ வெளியீடு குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த படத்தின் எழுத்தாளர் ரத்ன குமார். அவரது ட்விட்டரில் ”மாஸ்டர் ஆடியோ வெளியீட்டிற்காக காத்திருப்பதாக” கூறியுள்ளார்.

இதனால் விரைவில் “மாஸ்டர்” ஆடியோ வெளியிட உள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் மாஸ்டர் குறித்த ஹேஷ்டேகுகளில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube