முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் பலி
முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டாக்டர் பலி

சீனாவின் வுகான் நகர ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அந்த ஆஸ்பத்திரி டாக்டர் லீ வென்லியாங் (வயது 34) தனது கல்லூரி தோழர்களான இதர டாக்டர்களுக்கு ‘விசாட்’ செயலி மூலம் விரிவான தகவல் அனுப்பி எச்சரித்தார். உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த தகவலை அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் லீயின் இந்த தகவல் அந்த வலைத்தளத்தில் வேகமாக பரவியது. இதனால் சீன போலீசார் வதந்தி பரப்புவதாக கூறி டாக்டர் லீ உள்பட சிலர் மீது குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் டாக்டர் லீயையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtube