சூப்பரான மட்டன் எலும்பு சால்னா
சூப்பரான மட்டன் எலும்பு சால்னா

தேவையான பொருட்கள் :

  • மட்டன் எலும்பு - 1 கப்
  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • கடலைபருப்பு - 1/2 கப்
  • நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
  • தக்காளி - 1/2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
  • பிரிஞ்சி இலை - 1
  • பட்டை - 1
  • கிராம்பு - 1 - 2
  • வெங்காயம் - 1/2 கப்
  • தக்காளி - 1/4 கப்
  • கத்தரிக்காய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
  • மல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

மட்டன் எலும்பு சால்னா

செய்முறை :

மட்டன் எலும்பை நன்றாக கழுவிக்கொள்ளவும்.

கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன், மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்) விட்டு வேக வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும்  தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,

பின் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன்  எலும்பு சால்னா ரெடி



மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtube