நடிகை தவமணி தேவி இறந்த நாள் 10-2-2020
நடிகை தவமணி தேவி இறந்த நாள் 10-2-2020

இலங்கையில் பிறந்து செல்வச் செழிப்புடன் இங்கிலாந்தில் கல்விகற்றவர் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு தமிழ்த் திரையுலகில் கவர்ச்சிக் கன்னியாக அடியெடுத்து வைத்தாத்.  ஒரு நாள் பரியார் சென்னையில் விடுதலை அலுவலகத்தில் இருந்தபோது படகு போன்ற காரில் வந்து இறங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  தான் நடிகையாக இருந்தாலும் பெரியாரின் புரட்சிக் கருத்துகளால் கவர்ந்து அவர் கொள்கையில் ஈர்ப்பு இருந்ததால் அவரைக் காண வந்ததாகக் கூறினார்.  அவரை அன்புடன் வரவேற்ற பெரியார் அன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் தன்னுடன் மேடையில் அமருமாறு அன்புக் கட்டளையிட்டார்.

பின்னாளில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய பெரியாரின் உதவியாளர் ராம.அரங்கண்ணல் நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டபோது நடிகையின் வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும் நம் கொள்கையால் கவரப்பட்டு வந்தவரை நாம் வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்டாராம்.

தவமணி தேவி நடித்த ஒரு திரைப்படத்தில் இந்திரஜித்தாக ஒரு சிறு வேடத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.  கலைஞர் வசனம் எழுதி எம்,ஜி,ஆர் கதாநாயகனாக நடித்த ராஜ குமாரியில் தவமணிதேவி நடித்துள்ளார்.

கே.தவமணி தேவி-- தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி... இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்.. தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்... தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்... ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்... கே.தவமணி தேவி-- கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டியத்தையும் முறையாகப் பயின்றவர். இவரது சிறந்த குரல் வளத்திற்காக இலண்டன் பிபிசி வானொலி இவருக்கு ‘நைட்டிங் கேர்ள்’ என்ற பட்டத்தைத் தந்துள்ளது. கே.தவமணி தேவி-- இவர் 1940 களிலேயே ஒரு படத்திற்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் வாங்கியவர். சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் அன்றைய நாளில் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூ.4000/- மட்டுமே... கே.தவமணி தேவி-- 1941-இல் வெளிவந்த ‘வன மோகினி’ திரைப்படத்தில் காட்டுவாசிப் பெண்ணாக புலித்தோல் ஆடை அணிந்து நடித்தார். கவர்ச்சியாக இருந்த அந்த ஆடையும் நடிப்பும் அவரை தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகியாக பட்டம் சூட்டியது... இந்தப்படத்தில் எம் கே ராதா நாயகனாக நடித்தார்.. சந்துரு என்கிற யானை பிரமாதமான சாகசங்களை செய்து காட்டி ரசிகர்களை கவர்ந்தது... தவமணிதேவியின் குரலில் இந்தப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கிறங்கசெய்தது ... இதனால் இவர் "சிங்களத்துக் குயில்" என அழைக்கப்பட்டார்...இசை அமைத்தவர் ராம்சித்தல்கர்.. பின்னாளில் இவர் சி ராமசந்திரா என அழைக்கப்பட்டார் ... கே.தவமணி தேவி நடித்த படங்கள் -- "சதி அகல்யா, வித்யாபதி, சகுந்தலை, ஆரவல்லி சூரவல்லி, வேதவதி (அல்லது) சீதா ஜனனம், வனமோகினி, நாட்டிய ராணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, பக்த காளத்தி, ஷியாம் சுந்தர்" கே.தவமணி தேவி அவர்கள் தனது 76- வது வயதில் (10-2- 2001) ராமேஸ்வரத்தில் மரணம் அடைந்தார் .


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Lanka4_youtube