எகிப்தில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி
எகிப்தில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை - ராணுவம் அதிரடி

எகிப்தில் ராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த இருந்த 10 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவ படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஆப்பிரிக்கா நாடுகளான எகிப்து, மாலி, பர்கினோ பசோ நைஜீரியா போன்ற சில நாடுகளில் போகோ ஹராம், அல்கொய்தா, ஐ.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் பயங்கரவாத் தாக்குதல்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள், போலீசார் என பலர் உயிரிழந்துள்ளனர். ராணுவமும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், எகிப்து நாட்டில் ராணுவ சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்த இருந்த 10 பயங்கரவாதிகளை அந்நாட்டு ராணுவ படையினர் சுட்டு வீழ்த்தினர். 

இது குறித்து எகிப்து ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தமர் அல்-ரெஃபாய் கூறுகையில், ‘வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியின் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்த முயன்றனர். ஆனால் ராணுவத்தினரின் கடும் முயற்சியால் அவர்களது திட்டம் முறியடிக்கப்பட்ட்டது. இந்த சண்டையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு அதிகாரிகள் உள்பட 7 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர்’ என தெரிவித்தார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube