வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சஜித் கோரிக்கை
வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சஜித் கோரிக்கை

வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வௌியிடுவதற்குப் பதிலாக வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சித் தலைர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கம் 4 வருடங்களில் அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2,562 வீடமைப்புக் கிராமங்களை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்மூலம் 387,520 பேர் நன்மையடைவதாகவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நிழல் தேசிய வீடமைப்புத் திட்டத்தை தற்போது சிலர் விமர்சிப்பதுடன் பல்வேறு பிரசாரங்களை முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டும் சஜித் பிரேமதாச, இந்த அரசாங்கம் உறுதி வழங்கியதைப் போன்று கிராமத்திற்கு வீடு திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் கூறியுள்ளார்.

மேலும் வீடில்லாத மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை கட்சி பேதமின்றி முன்னெடுக்க வேண்டும் எனவும் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட வீடமைப்புத் திட்டங்களைக் கண்டு பொறாமை கொள்வதற்குப் பதிலாக மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்றுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube