மூன்றாவது முறையாக டெல்லியை பிடிக்கும் ஆம் ஆத்மி: களைகட்டும் கட்சி ஆபீஸ்
மூன்றாவது முறையாக டெல்லியை பிடிக்கும் ஆம் ஆத்மி: களைகட்டும் கட்சி ஆபீஸ்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் கடந்த 8ம் தேதி முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் இன்று ஒரே நாளில் முழுவதுமாக நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட போதே ஆம் ஆத்மி பல இடங்களில் முன்னணி வகிக்க தொடங்கியது.

தற்போது மற்ற வாக்குகளும் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி 50 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் முன்னிலை எதுவும் கிடைக்காத நிலையில் உள்ளது. 70 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் மதியத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70 தொகுதிகளில் 36 இடங்களை பிடித்தால் பெரும்பான்மை என்ற நிலையில் ஆம் ஆத்மி 50 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் ஆம் ஆத்மி கட்சியினர் இப்போதே வெற்றியை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் கட்சியாக ஆம் ஆத்மி இருக்கும் என சொல்லப்படுகிறது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube