முப்படையினருக்கான பொதுமன்னிப்பு காலம் நிறைவு
முப்படையினருக்கான பொதுமன்னிப்பு காலம் நிறைவு

72 ஆவது தேசிய சுதந்திர தினத்துக்கு அமைவாக 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வார கலத்துக்கு பொது மன்னிப்புக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கமைவாக கடமைக்கு திரும்பாத முப்படை வீரர்களும் சட்டபூர்வமாக கடமையிலிருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைவதற்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைவாக 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் இன்று குறித்த பொது மன்னிப்பு காலம் முடிவடைந்துள்ளதோடு , இது வரை 6 தினங்களுக்குள் 13 அதிகாரிகளும், 6,259 அலுவலர்களும் சேவைக்கு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube