பகிடிவதை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை – ஆளுனர்
பகிடிவதை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை – ஆளுனர்

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறைப்பாடுகளை வழங்க வேண்டும் எனவும் , அவ்வாறு முறைப்பாடுகளை வழங்கினால் தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுக்க தயார் என்றும் வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி. எச். எம் .சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆளுனரின் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் , பல்கலை பகிடிவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர் பகிடிவதை குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எவரும் எமக்கு முறைப்பாடுகளை தெரிவிக்கவில்லை அவ்வாறு தெரிவிக்கும் இடத்தே  அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தயாராக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube