டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 16ம் தேதி கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார். அவரது வீட்டில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

அப்போது கெஜ்ரிவால், கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். மேலும் புதிய அரசு பதவியேற்கும் தேதி, மற்றும் புதிய மந்திரி சபை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

2015 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, கெஜ்ரிவால் பிப்ரவரி 14ம் தேதி பதவியேற்றார். எனவே, இந்த முறையும் அதே தேதியை முடிவு செய்யலாம், அல்லது 16-ம் தேதியை முடிவு செய்யலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா வரும் 16-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4 youtube