ஜாம்பியாவிற்கு 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பி உதவிய இந்தியா

#India #water #Disease #Medicine #Aid #cholera #Zambia
Prasu
3 months ago
ஜாம்பியாவிற்கு 3.5 டன் மருந்து பொருட்களை அனுப்பி உதவிய இந்தியா

காலரா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஜாம்பியாவிற்கு உதவும் வகையில், மருந்துகள் உள்பட சுமார் 3.5 டன் மனிதாபிமான உதவி பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பியது.

ஜாம்பியா நாட்டில் தற்போது திடீரென காலரா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த நாட்டுக்கு உதவ இந்தியா முன் வந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு விமானம் மூலம் மருந்து உதவிப் பொருட்களை இன்று அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- காலரா நோயால் பாதிக்கப்பட்ட சாம்பியா நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா சார்பில் செய்ய முடிவு செய்யப்பட்டதையொட்டி 3.5 டன் மருந்து உதவி பொருட்கள் இன்று சரக்கு விமானம் மூலம் அனுப்பபட்டு உள்ளது.

 இதில் குடிநீர் சுத்திகரிப்பு பொருட்கள், குளோரின் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துபொருட்கள் அடங்கும்.