வவுனியாவில் தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கான அவசர தொலைபேசி இலக்க அறிமுக நிகழ்வு!

#SriLanka #Vavuniya
Mayoorikka
1 month ago
வவுனியாவில் தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கான அவசர தொலைபேசி இலக்க அறிமுக நிகழ்வு!

தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கான அவசர தொலைபேசி இலக்கம் 107 இன் அறிமுக நிகழ்வு இன்று (16.03) வவுனியாவில் இடம்பெற்றது.

 வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்து விஜயசேகர தலைமையில் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலய வாளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்காக நாடு பூராகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்ற நிலையில், அதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

images/content-image/2023/03/1710588693.jpg

 இந்நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ண உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மதத்தலைவர்கள், கிராம அலுவர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

images/content-image/2023/03/1710588740.jpg