மீன ராசியினருக்கு ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு சூரியனால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
மீன ராசியினருக்கு ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு சூரியனால் சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: பணியிடத்தில் நெருக்கடிகள் தோன்றும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருங்கள். பரணி: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வருமானம் கூடும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பேற்படும். ரோகிணி: செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. திருவாதிரை: பிறரது நலனில் அக்கறை கொள்வீர்கள். உங்களை விமர்சனம் செய்தவர்களும் உங்களைப் பாராட்டுவர். புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூசம்: மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிகள் வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆயில்யம்: செயல்களில் சங்கடங்கள் தோன்றினாலும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும். புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம். பூரம்: வரவைவிட செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையைக் காண முடியாமல் போகும். உத்திரம் 1: புதிய செயல்களில் ஈடுபடுவதும் முதலீடு செய்வதும் இன்று வேண்டாம். அமைதி காப்பது நன்மையாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் செயலில் குழப்பம் தோன்றும். கடக சந்திரனால் முயற்சி லாபமாகும். அஸ்தம்: விருப்பங்கள் நிறைவேறும். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். சித்திரை 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும்.

துலாம்

சித்திரை 3,4: ஜென்ம ராசிக்கு குருவின் பார்வை உண்டாகி இருப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். சுவாதி: பழைய செயல் ஒன்றிலிருந்து பணம் வரும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதில் தெளிவு உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: பழைய பிரச்னைகள் மீண்டும் தலையெடுக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் கை ஓங்கும். அனுஷம்: தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள். மற்றவர்களால் முடியாத ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். கேட்டை: குடும்ப பிரச்னையை லாவகமாக கையாள்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும்.

தனுசு

மூலம்: உங்கள் முயற்சிகளில் நிதானம் அவசியம். யோசித்து செயல்படுவதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். பூராடம்: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவையாக இருக்கும். உத்திராடம் 1: மனதில் தேவையற்ற குழப்பங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். திருவோணம்: வாழ்க்கைத்துணையின் ஆலோசனையால் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். அவிட்டம் 1,2: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: இரண்டாமிட ராகுவால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும் என்றாலும், ஆறாமிட சந்திரனால் முயற்சியில் இருந்த தடை விலகும். சதயம்: உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் நிலைமையை உணர்ந்து செயல்படுங்கள். பூரட்டாதி 1,2,3: வார்த்தைகளில் கவனம் அவசியம். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு சூரியனால் செயல்களில் சில சங்கடங்கள் தோன்றும். உத்திரட்டாதி: தம்பதிகளுக்குள் வீண் பிரச்னை உருவாகும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். ரேவதி: நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பூர்வீக சொத்து குறித்த வழக்கு மீண்டும் வேகமெடுக்கும்.