மின் கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் யானைகள்: எடுக்கப்படும் நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
மின் கம்பிகளில் சிக்கி உயிரிழக்கும் யானைகள்: எடுக்கப்படும்  நடவடிக்கை!

மாகாணம் முழுவதிலும் உள்ள மின்கம்பிகளை பரிசோதிக்கும் பணியை தொடர்வதன் மூலம் காட்டு யானைகள் மின்கம்பிகளில் சிக்கி உயிரிழப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரமற்ற மின்கம்பிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத வயரிங் காரணமாக வருடாந்தம் இடம்பெறும் காட்டு யானைகளின் கணிசமான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

2010 முதல் தற்போது வரை 470 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. கடந்த ஆண்டில் மாத்திரம் 72 யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வருடத்தின் கடந்த சில மாதங்களில் மாத்திரம் 80இற்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பதைத் தடுக்க இரண்டு யுக்தி அணுகுமுறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, கடந்த சில மாதங்களில் நாடளாவிய ரீதியில் 2000 தனியார் மின் கம்பிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 30 வீதமானவை தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சந்தன சூரியபண்டார தெரிவித்தார்.