விடுதலைப்புலிகளின் கொள்கைகளினை மீறும் புலம்பெயர் அமைப்புக்கள்! அது என்ன?

#Tamil #Diaspora #LTTE
PriyaRam
1 month ago
விடுதலைப்புலிகளின் கொள்கைகளினை மீறும் புலம்பெயர் அமைப்புக்கள்! அது என்ன?

ஈழத் தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாக விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு கட்டுக் கோப்போடும் ஒழுக்கத்தோடும் உலக இயக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அமைப்பாக விளங்குகின்றது.

இலங்கை அரசினால் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டத்திற்கு எதிராக ஏராளமான அகிம்சை ரீதியான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியளிக்காத நிலையில் ஈழத்தமிழர்களுக்கான சுதந்திரத்தினை போராடியே பெற வேண்டிய கட்டாயத்தினால் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகன் அவர்களினால் விடுதலைப் புலிகள் அமைப்பு 1972 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தனிநாடு கோரிக்கையினை பெற்றுக்கொள்வதற்காக ஆயுதமேந்தி போராட வேண்டிய நிலையில் விடுதலைப்புலிகள் அமைப்பானது ஈழத்தமிழ் இளைஞர்களை திரட்டி ஒரு பலமான இராணுவ கட்டமைப்பினை தேசிய தலைவர் பிரபாகரன் தலைமையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு பலமான கட்டமைப்புடன் கம்பீரமாக உருவெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழீழ மக்களின் விடுதலையே தமது மூச்சாகவும் இலக்காகவும் கொண்டு தமிழ் மக்களிடையே எந்தவிதமான ஏற்றத் தாழ்வுகளற்ற, பாலின வேறுபாடுகள், சாதிய, முரண்பாடுகளற்ற மற்றும் பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிகரமான அரசியல் கொள்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வைத்திருந்தது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்த அமைப்பு இவ்வாறான கொள்கையில் சிறிதளவேனும் மாறாமல் கடைப்பிடித்து வந்தது. சாதி மதம் என எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு மக்களை வழிப்படுத்தி வந்தனர். பெண்களுக்கும் சம உரிமை, பாதுகாப்பு வழங்கப்பட்டு அவர்களையும் வீர மங்கைகளாக உருவாக்கினார்கள்.

2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் புலம்பெயர் தேசங்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் சில அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, மாவீரர் தினம், ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,

இந்த அமைப்புக்களானது விடுதலைப்புலிகளின் பெயரை சொல்லியே உருவாக்கப்பட்டதும், அவர்களது நடவடிக்கைகளை கூறியே பணங்களினையும் வசூலித்து தமது செயற்பாடுகளினை மேற்கொள்கின்றனர், ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கட்டாயமாக கையாளப்படவேண்டும் என்று ஒவ்வொரு போராளிக்கும் வலியுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகளினை கடைப்பிடிக்க தவறுகின்றனர்.

"சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் "

விடுதலைப்புலிகள் அமைப்பானது பெண்கள் விடையத்திலும், சாதி விடையத்திலும் மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளினை விதித்து வந்தனர். ஆனால் இந்த அமைப்புக்களில் அவை காணாமல் போய்விட்டன, அமைப்புக்களின் பதவிகளில் குறிப்பிட்ட சாதியினரே இருக்க வேண்டும் என்ற கொள்கைகளை கொண்டு வருவதாகவும் அமைப்புக்களில் செயற்படும் சிலர் தெரிவிக்கின்றனர், அதே போல் பெண்கள் விடையத்திலும் தவறான நடத்தைகள் காணப்படுவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

ஒரு தலைவர் கட்டுப்பாட்டுடன் கையாண்ட ஒரு போராட்ட அமைப்பில் பங்கு பற்றி அதில் இருந்து தப்பி வந்து இருக்கும் இவர்கள் இவ்வாறான வேலைகள் செய்வது அந்த தலைவனையும் போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகள் ஆகும்.

இவ்வாறான அமைப்புக்களிலிருந்து கொண்டு கொள்கைக்கு முரணான செயற்பாடுகளினை செய்தால் மக்களும் அதன் மீது கொண்ட பற்றுதலை விலக்குவதற்கு காரணமாகிவிடும், எனவே இந்த அமைப்புக்களில் இருப்பவர்கள் தலைவரையும் இந்த போராட்டத்தையும் புனிதாமானது எனவும் மக்களுக்கானது எனவும் நினைத்தால் கொள்கைகளினை மறவாது அதன்படி நடக்க வேண்டும், இல்லாவிட்டால் அவ்வாறு கடைப்பிடிக்க கூடியவர்களிடம் பொறுப்புக்களினை ஒப்படைக்க வேண்டும்.