விருச்சிக ராசியினருக்கு தொழிலில் இருந்த தடைகள் விலகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
விருச்சிக ராசியினருக்கு தொழிலில் இருந்த தடைகள் விலகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.கார்த்திகை 1: நண்பர்கள் உங்கள் செயலுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணியிட பிரச்னைகள் தீரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தாமதமாக நிறைவேறும். பணவரவு இழுபறியாகும். ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும். மிருகசீரிடம் 1,2: நீண்ட நாள் இன்று நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.திருவாதிரை: அரசு வழியில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் செயல்களில் கவனம் அவசியம்.புனர்பூசம் 1,2,3: தாய்வழி உறவினரின் ஆதரவு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும். பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகும். பிறர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம்: சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருமானம் கூடு.

சிம்மம்

மகம்: எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வார்த்தைகளில் நிதானம் அவசியம். பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உத்திரம் 1: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.அஸ்தம்: இழுபறியாக இருந்த செயல் பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணமும் அலைச்சலும் ஏற்படும். வரவு செலவில் கவனமாக செயல்படுங்கள். சுவாதி: உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள்.விசாகம் 1,2,3: குடும்ப வகையில் திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அனுஷம்: நண்பர்களால் உங்கள் செயலில் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்கள்.பூராடம்: உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். உத்திராடம் 1: பணியாளர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் சங்கடமே.

மகரம்:

உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.திருவோணம்: புதிய முயற்சியில் பலமுறை யோசித்து செயல்படுங்கள். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பர். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக செயல்படுவர்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் இழுபறியாகும். எதிர்பாராத வரவு உண்டு. சதயம்: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.பூரட்டாதி 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அடுத்தவர் பிரச்னையில் இன்று தலையிட வேண்டாம்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.ரேவதி: நீங்கள் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.