துலா ராசியினருக்கு அறிவாற்றலால் நிதிநிலை உயரும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
துலா ராசியினருக்கு அறிவாற்றலால் நிதிநிலை உயரும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இழுபறியாக இருந்த முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பரணி: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். செலவுகளை சமாளிப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள் விலகுவர். பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் செயலுக்கு வரவேற்பு உண்டாகும். ஆயில்யம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து லாபமும் முன்னேற்றமும் ஏற்படும்.பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்.உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நட்பு வட்டம் விரிவடையும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உறவினரால் அனுகூலம் ஏற்படும். அஸ்தம்: உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.சித்திரை 1,2: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.சுவாதி: உங்கள் அறிவாற்றலால் நிதிநிலையில் உயர்வு உண்டாகும். முயற்சி நிறைவேறும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் உதவியால் நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களை விட்டு விலகிச்சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவார்கள். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம்.பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். உத்திராடம் 1: வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். திருவோணம்: கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று லாபத்தை ஏற்படுத்தும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் கூடும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: உங்கள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். பூரட்டாதி 1,2,3: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி இன்று வெற்றியாகும். குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.ரேவதி: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வசூலாகும்.