TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வர கென்யா பரிசீலனை

#government #Social Media #TikTok #Kenya #Safety
Prasu
3 weeks ago
TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வர கென்யா  பரிசீலனை

கென்யாவில் TikTok செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, TikTok பயன்பாட்டிற்கு எதிராக கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் சமீபத்திய நாடாக கென்யா மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீன நிறுவனமான பைட் டான்ஸ், அதன் நாட்டின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுடன் எவ்வாறு இணங்குகிறது என கென்யாவின் உயர் அதிகாரிகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கென்யாவில் TikTok அப்ளிகேஷன்களுக்கு தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கென்யா அதிகாரிகள் அதை பரிசீலித்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரவு தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் கூட TikTok தடை பற்றிய பேச்சு உள்ளது.

 மேலும், செனகல் மற்றும் சோமாலியாவில் டிக்டாக் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன