கடக ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
கடக ராசியினருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பண நெருக்கடி தீரும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். பரணி: இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மை உண்டாகும்.கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறைகளை மற்றவர்கள் பாராட்டுவர். திட்டமிட்ட முயற்சி நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: பேச்சு வார்த்தையின் மூலமாக ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும். திருவாதிரை: வேலை பளுவால் மனம் சோர்வடையும். நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும்.புனர்பூசம் 1,2,3: முயற்சியில் தடை தாமதம் உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் செயல்கள் வெற்றியாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.பூசம்: வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: புதிய முயற்சியில் லாபம் காண்பீர். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகுவர்.

சிம்மம்

மகம்: பொருளாதார நெருக்கடி விலகும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.பூரம்: உங்கள் முயற்சி பலன்தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர். உத்திரம் 1: நேற்றுவரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும்.அஸ்தம்: தொழிலை மாற்றம் செய்ய திட்டமிடுவீர். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர்.சித்திரை 1,2: உங்கள் சாமர்த்தியத்தால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உறவுகளிடம் செல்வாக்கு உயரும். 

துலாம்

சித்திரை 3,4: நேற்று இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல்களில் தெளிவு உண்டாகும். சுவாதி: குழப்பம் விலகும். யோசித்து செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.விசாகம் 1,2,3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல்களில் லாப நிலை உண்டாகும். அனுஷம்: வெளியூர் பயணம் ஆதாயமாகும். நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கேட்டை: வாழ்க்கைத்துணையின் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர் முயற்சி வெற்றி பெறும்.பூராடம்: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சியில் லாபம் உண்டாகும். உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்று எதிர்ப் பார்த்திருந்த தகவல் வரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் எதிர்ப்பு விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திருவோணம்: உங்கள் திறமை இன்று வெளிப்படும். தடைபட்ட செயல் நிறைவேறும். அவிட்டம் 1,2: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். வரவு திருப்தியாகும்.சதயம்: வியாபாரத்தில் நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும்.பூரட்டாதி 1,2,3: குடும்ப சொத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசித் தீர்ப்பீர். வரவேண்டிய பணம் வரும். 

மீனம்

பூரட்டாதி 4: துணிவுடன் செயல்பட்டு செயலில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்ரேவதி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.