சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிடின் இனவழிப்பு நடந்திருக்காது! உருத்திரகுமரன்

#SriLanka
Mayoorikka
2 weeks ago
சர்வதேசத்தின் தலையீடு இல்லாவிடின் இனவழிப்பு நடந்திருக்காது! உருத்திரகுமரன்

சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால், ருவாண்டா விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்திருப்பார்கள். என விஸ்வநாதன் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி ஆகும். 100 நாட்களில் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும் Hutu மிதவாத இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.

 ருவாண்டா இன அழிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இவ் இன அழிப்பை சர்வதேச சமூகமானது குறிப்பாக பலம் வாய்ந்த சர்வதேச சக்திகள் கவனத்தில் எடுக்கவில்லை. மேலும் படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பென ஏற்றுக் கொள்ள சர்வதேச சக்திகள் மறுத்திருந்தன. 100 நாள்களுக்குப் பின்னரே ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது “இனவழிப்பு நடவடிக்கை” என அமெரிக்கா குறிப்பிட்டிருந்த போதும் இந்நடவடிக்கைகள் இனவழிப்புக் குற்றத்தில் உள்ளடங்குபவை என கூறத் தயாராக இருக்கவில்லை.

 அமெரிக்காவின் இயலாமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது எத்தனை “இனவழிப்பு நடவடிக்கைகள்” இனவழிப்பாகும் என பிரபலமான குறிப்பிடத்தக்க கேள்வியை ஒரு ஊடகவியலாளர் வினவியிருந்தார்.

 1994ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி வரை அந் நேரத்தில் அமெரிக்க இராஜாங்கச்செயலாளராகவிருந்த Warren Christopher, ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் படுகொலை, இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை. படுகொலையை இனவழிப்பென சர்வதேச சக்திகள் எற்க தயங்குவதற்கு காரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இன்ப்படுகொலையென அங்கீகரித்தால் அதனைத் தடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு இருப்பதே ஆகும்.

 அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையின் தலைவராகவிருந்த கொபி அனான் (Kofi Annan) ருவாண்டா இனப்படுகொலையை தடுக்கத்தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இதுந்தது என்பதல்ல, மாறாக மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும். ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சக்திகளோ ருவாண்டா இனவழிப்பை நிறுத்தவில்லை. 

ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவண்டா தேசிய முண்ணனியே(Rwandan Patriotic Front) அவ் இனவழிப்பை நிறுத்தியது. இச் சந்தர்ப்பத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை, ருவாண்டா இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ருவாண்டா இனவழிப்பை தடுத்து நிறுத்தாதது போன்று தமிழ் இனவழிப்பையையும் தடுத்து நிறுத்தாமைக்குக் காரணம் தமிழினப்படுகொலையை அவர்கள் அறியாமல் இருந்தது என்பது அல்ல மாறாக அந் நாடுகளின் அரசியல் நிலைப்பாடே காரணம் ஆகும். ருவாண்டா இனவழிப்பு தொடர்பாகவும், தமிழ் இனவழிப்பு தொடர்பாகவும் சர்வதேச சக்திகளின் நிலைப்பாடுகளில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவாண்டா தேசிய முன்னணியின் ஆயுதப்போராட்டத்தை முறியடிக்கவில்லை. 

ஆயினும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பின்போது, தமிழ்த்தேசியத்தின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை முறியடிப்பதில் சர்வதேச சக்திகள் முக்கிய பங்குவகிக்கின்றன. சிறிலங்கா தனது தமிழ் இனவழிப்பிற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் “ என முலாம் பூசியபோது சர்வதேச சக்திகள் இந்தப் பொய்யை ஏற்றுக் கொண்டதுடன், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பிற்கு ஆயுதங்களையும் வழங்கியது. சர்வதேச சக்திகளின் இந் நடவடிக்கை தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தது என கருதவேண்டி உள்ளது. சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா தேசிய விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.

 இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஜேர்மனியானது காஸாவில் நடைபெறும் இனவழிப்புக்கு உடந்தையாக இருக்கின்றதென்ற சர்வதேச நீதிமன்றத்தில் ஜேர்மனிக்கெதிரான நிக்கரகுவாவின்சட்ட முன்னெடுப்பானது உலகம் முழுவதுமுள்ள இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வழிகாட்டல்களை வழங்குமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது. கொங்கோவில்(ருவாண்டாவின் நடவடிக்கை தொடர்பாக, ருவாண்டா அதிகாரி ஒருவர் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமக்கு “சர்வதேசத்தின் அனுமதி தேவையில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். 

அமெரிக்காவிற்கு எதிராக நிக்கரகுவா 1986 ஆம் ஆண்டு உலக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உலக நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51 வது சரத்து தற்காப்பு தொடர்பாக தனி நபர்களுக்கும், குழுமங்களுக்கும் உள்ளார்ந்த உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து உள்ளது எனக் கூறியது. 2005 ஆம் ஆண்டில் அப்போது அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சராகவிருந்தவர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ருவாண்டா இனவழிப்பின் கோட்பாடு அரசுகளாலே பின்னர் கொல்லப்பட்டது. 

 ருவாண்டா இனவழிப்புக்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புக்குமிடையிலான இன்னொரு முக்கிய வேறுபாடானது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பானது. ருவாண்டா இனவழிப்பையடுத்து ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சக்திகளும் இனவழிப்பிற்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கியிருந்தன. தமிழ் இனவழிப்பு தொடர்பாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு சர்வதேச தீர்ப்பாயமும் உருவாக்கப்படவில்லை. தமிழ் இனவழிப்புக்கு எந்தவொரு சர்வதேச நீதி தொடர்பாக முன்னெடுப்பும் இதுவரை இல்லை. 

இனவழிப்பிற்கு எதிரான சாசனத்தின் கைச்சாத்திட்டுள்ள 153 நாடுகளில் எந்தவொரு நாடும் உலக நீதிமன்றத்தில் சிறிலங்காவிற்கு எதிரான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிலங்கா அரசின், அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் எவரையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கவில்லை. 

 மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழர்களின் குருதியின் மேல் சிறிலங்கா நிற்கின்றது- நலன்களின் அடிப்படையில் சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த கரங்களை சர்வதேச சக்திகள் தொடர்ந்தும் பற்றிக் கொள்கின்றன. கடந்த 15 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புக்காக சிறிலங்கா தேசத்தின் பொறுப்புக்கூறல் தவறல், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உக்ரேன், காஸா மோதல்களானவை பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய புதிய சர்வதேச ஒழுங்கொன்றின் தேவையை உடனடியாக வலியுறுத்துகிறது