பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேர் கடத்தி சுட்டுக்கொலை

#Murder #people #Pakistan #GunShoot #Kidnap
Prasu
2 weeks ago
பாகிஸ்தானில் பொதுமக்கள் 11 பேர் கடத்தி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ்சை பயங்கரவாதிகள் வழிமறித்தனர். 

துப்பாக்கி முனையில் பஸ்சில் பயணித்த 9 பேரை கடத்தி சென்றனர். பின்னர் அந்த 9 பேரும் அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதிகளில் பிணமாக கிடந்தனர். அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

அதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

 இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்-மந்திரி மிர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.