ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்!

#SriLanka #Australia #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 weeks ago
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

இதில் பாதிரியார்  ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார். 

இந்த நிகழ்வு தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டது.

தாக்குதல் தாரியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.