மகர ராசியினருக்கு மனதில் தன்னம்பிக்கை உண்டாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
மகர ராசியினருக்கு மனதில் தன்னம்பிக்கை உண்டாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் உங்கள் செயல்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.பரணி: புதிய செயல்கள் இழுபறியாகும். நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும்.கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றியடைவீர்கள். அந்நியர்களால் ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியால் உங்கள் செயல் நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மற்றவரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. வருமானம் கூடும்.திருவாதிரை: உங்களை விமர்சனம் செய்தவர்களும் இன்று உங்களைப் பாராட்டுவார்கள்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும். செலவுகள் கட்டுப்படும்.

கடகம்:

புனர்பூசம் 4: உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் வரும்.ஆயில்யம்: செயலில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

சிம்மம்

மகம்: வரவேண்டிய பணம் வருவது தாமதமாகும். வாகனப் பயணத்தில் கவனம் அவசியம்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல் படுவதால் சங்கடங்கள் குறையும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.

துலாம்

சித்திரை 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.சுவாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்ப உறவுகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். நினைத்ததை அடைவீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும். அனுஷம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். பெரியோர்கள் ஆதரவால் ஆதாயம் தோன்றும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும். பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கவனம் அவசியம்.உத்திராடம் 1: கடனால் மனம் சங்கடப்படும். வேலையில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் போகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும்.திருவோணம்: வாழ்க்கைத்துணையால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவிட்டம் 1,2: குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: எதிரி தொல்லை நீங்கும். உங்களைவிட்டு விலகிச்சென்றவர்கள் உங்களைத்தேடி வருவார்கள். சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அந்நியரால் குடும்பத்தில் சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். 

மீனம்

பூரட்டாதி 4: பெரியோரின் ஆலோசனைபடி செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பணியில் இருந்த சங்கடம் நீங்கும்.உத்திரட்டாதி: பணியிட பிரச்னையை சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் சரியாகும். ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி கேட்பார்கள்.