மிதுன ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

#Astrology
Mayoorikka
2 weeks ago
மிதுன ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

மிதுன ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் மிதுன ராசியின் அதிபதி புதன் . மிதுன ராசியில் மிருகசீரிஷம் நட்சத்திரம் 3, 4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரங்கள் 1, 2, 3 ஆம் பாதங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

 மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்ற விரும்பக் கூடியவர்கள். அதே சமயம் மிதுன ராசி பெண்கள் என்று வரும் போது அவர்களின் குணங்கள் வேறாக இருக்கும். மிதுன ராசியில் பிறந்ததவர்களின்    குணங்கள், காதல், திருமண பொருத்தம், வேலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 மிதுன ராசியில் பிறந்ததவர்கள்  எப்போதும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புவார்கள். அதே போல் மற்றவர்களின் கருத்துக்களையும் எப்போதும் கேட்கவும் விரும்புவார்கள். ஒருவேளை மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்க தயங்கினாலும், தேடை ஏற்பட்டால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். தனக்கு ஆதரவாக இருப்பவர்களை மட்டுமே இவர்கள் அதிகம் தேடுவார்கள், அவர்களை மட்டுமே தங்களுடன் வைத்துக் கொள்வார்கள்.  சிரித்துக் கொண்டே இருப்பார்கள். 

images/content-image/2024/04/1713323841.jpg

சமூகத்தில் பலதரப்பட்ட மட்டங்களில் அதிக நண்பர்களை வைத்திருப்பார்கள். அதே சமயம் இவர்களின் பல விஷயங்கள் கணிக்க முடியாததாக இருக்கும். இவர்கள் யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். 

காதல் 

மிதுன ராசிக்காரர்கள் திடீரென காதலில் விழக் கூடியவர்கள்.

 தங்களின் அன்பான பேச்சு, காதல் மனநிலைக்கு அப்படியே மாறி விடுவார்கள். இவர்கள் விரைவில் காதலிக்கக் கூடியவர்கள் என்பதால் இவர்களை பற்றி அவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. இவர்கள் எப்போதும் தங்களை நியாயப்படுத்த ஒரு காரணத்தை கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். தங்களின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக காதலிக்கக் கூடியவர்கள் இவர்கள். அதே சமயம் தங்களின் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர்கள்.

 ஒரு விஷயம் தங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை என்றால் உடனடியாக தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள கூடியவர்கள். நன்கு படித்த, அறிவான ஆண்களையே துணையாக அடைய இவர்கள் விரும்பக் கூடியவர்கள்.

 திருமண பொருத்தம்

 மிதுனம் ராசி, காற்றின் ராசியாகும். அதனால் அனைத் து விதமான காற்று ராசிகளும் இவர்களுக்கு பொருந்தக் கூடியதாகும். மற்ற மிதுன ராசிக்காரர்களுடனும், நெருப்பு ராசிகளான சிம்மம், தனுசு, மேஷம் ஆகிய ராசிகள் நன்கு பொருந்தக் கூடிய ராசிகளாகும். பூமி மற்றும் நீர் ராசிகளுடன் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண பந்தம் ஏற்பட்டால் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும். கன்னி மற்றும் மீன ராசிகளுடனான மிதுன ராசிக்காரர்களின் உறவு மிகவும் கடினமானதாகவும் சவாலானதாகவும் இருக்கும். மிதுன ராசிப் பெண்கள் தங்களின் இளமை பருவத்தில் மிகவும் குழப்பமான மனநிலையுடனேயே இருப்பார்கள். இவர்கள் சமூகத்துடனும், மற்றவர்களுடனும் இணைந்து இருக்க விரும்பினாலும், அந்த உறவை எப்படி கொண்டு செல்வது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். அவர்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களை மட்டுமே தேடுவதால் மிக குறைவான நெருக்கமான நண்பர்களை மட்டுமே வைத்திருப்பார்கள். தனக்கு சரிவரவில்லை என்றால் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தனியாக நேரத்தை செலவிட விரும்புவார்கள்.

 தொழில் 

ஆர்வமும், ஊக்கமும் தரும் துறைகளில் பணியாற்றவே மிதுன ராசி க்காரர்கள் அதிகம் விரும்புவார்கள். இதனால் பலதரப்பட்ட வேலைகளை செய்வதற்கு அவர்கள் விரும்புவார்கள். கலை வடிவமைப்பு, தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு, கட்டிடக்கலை, சட்ட அமலாக்கம், இயந்திர செயல்பாடு, தீயணைப்பு துறை ஆகிய துறை சார்ந்த பணிகள் பொருத்தமானதாக இருக்கும். பாலியல் உறவுகளை பொருத்தவரை இவர்கள் மிதுன ராசி க்காரர்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். 

இவர்கள் உடல் தோற்றம், அழகை அதிகம் விரும்பக் கூடியவர்கள் என்பதால் அது பாலியல் உறவில் மிகவும் பொருந்தக் கூடியதாக அமையும். தங்களுக்கு பொருத்தமாக உணர்ந்தால் இவர்களே முன்வந்து உறவை முன்னெடுப்பார்கள். பாலியல் உறவில் புதிய விஷயங்கள், நுட்பங்களை செய்ய விரும்பக் கூடியவர்கள்.

 மிகவும் நெருக்கமான உறவை வழங்க கூடியவர்கள். தனது துணையிடம் இருந்து புதிய உற்சாகத்துடனான அணுகுதலை விரும்பக் கூடியவர்கள் இவர்கள்.

 மிதுன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

 மிதுனம் என்பதே இரட்டையர்கள் என்று முன்பே பார்த்தோம். இவர்களின் ராசியாதிபதி புதனாக வருவதால், பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் இவர்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும், ஒரே தலத்தில் இரட்டைப் பெருமாள் அருளும் தலமாக இருந்தால் அது மிகவும் விசேஷம். அவ்வகையில் மிதுன ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருத்தலம் திருத்தொலைவில்லி மங்கலம். இந்த திருத்தலம் திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.