பரபரப்புக்கு மத்தியில் இலங்கை வரும் ஈரானிய ஜனாதிபதியால் இலங்கைக்கு சிக்கலா?

#SriLanka #Iran
Mayoorikka
1 week ago
பரபரப்புக்கு மத்தியில் இலங்கை வரும் ஈரானிய ஜனாதிபதியால் இலங்கைக்கு சிக்கலா?

மிகவும் பரபரப்பானதொரு சூழலிலே இலங்கை வருகிறார் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸ்ஸி. இவர் எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கை வர இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்களும் அரசு தரப்பு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

 இவரின் இலங்கை விஜயத்தினை நோக்கும் போது ஊவா மாகாணத்தில் இருக்கக்கூடிய உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காகவே அவர் இலங்கை வருவதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த உமா ஓயா பலநோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கான நிதியினையும் தொழில்நுட்ப அறிவையும் அதனுடைய செயல்பாடுகளையும் ஈரானிய அரசே இலங்கைக்கு வழங்கி இருந்தது .

 அந்த வகையிலேயே இந்த திட்டம் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டது இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட உமா ஓயா அபிவிருத்தி திட்டமானது ஊவா மாகாணத்திலே உள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான குடிநீர் விநியோகத்திற்காகவும் அந்த பிரதேசத்தில் இருக்கக்கூடிய சுமார் 15,000 ஏக்கர் நெற் பயிர் செய்கையை மேம்படுத்துவதற்காகவும் இலங்கையினுடைய தேசிய மின் கட்டமைப்போடு சுமார் 120 மெகா வோர்ட்ஸ் மின்சாரத்தை இணைத்துக் கொள்வதற்கான செயல் திட்டமாக இது அமைந்திருந்தது.

 அந்த வகையிலே உமா ஓயாவின் புகழ்போல நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் சுரங்க வழி நீர்ப்பாசனம் ஊடாக டாயபர நீர்த்தேக்கத்துக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சுமார் 15 தசம் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுரங்க வழியாக கந்தபொல மின் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விவசாயத்திற்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.

 இந்த திட்டத்தின் அனைத்து விதமான ஏற்பாடுகளுக்கும் அனுசரணையாக இருந்தது ஈரானிய அரசேயாகும் இந்தப் போர் சூழல் சந்தர்ப்பத்திலே இந்த நீர்த்தக்கத்தின் பலநோக்க அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஈரானிய ஜனாதிபதி இலங்கை வருவது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஒன்று இந்த திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அவர் வருகை தருகின்ற பொழுதிலும் இவரது வருகையை அமெரிக்காவும் இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் எவ்வாறு பார்க்கின்றன. 

இந்த போர்ச் சூழலிலே இப்ராஹிம் ரைஸ்ஸி வரக்கூடியதற்கான சாத்தியமான சூழ்நிலை காணப்படுகிறதா? அவ்வாறு அவர் இலங்கை வந்தாலும் அவருக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொடர்பிலே இலங்கை அரசின் மீது அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாடுகள் மிகவும் விஷனத்தை எழுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க தூதுவர் இலங்கை அரசுக்கான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

 எதிர்காலத்திலே இந்த நிலைப்பாடானது இலங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி ஒன்றும் தகவல்களை வெளியிட்டு இருக்கின்ற இந்த நிலையில் இலங்கைக்கு வருகைதருகின்ற இப்ராஹிம் ரைஸ்ஸி அவர்களுக்கான பாதுகாப்பு சூழல் எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பிலும் இப்பொழுது பரபரப்பாக பேசப்படுகிறது. 

இருந்தாலும் 24 ஆம் திகதி காலை வருகை தந்து நீர்தேக்கத்தின் திட்டத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்த கையோடு அவர் மீண்டும் நாடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையிலே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மீண்டும் சூடு பிடித்திருக்கின்றது. 

இன்று இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவரது வருகை எந்தளவு சாத்தியப்படும் இவரது வருகையின் பின்னரான இலங்கை எதிர்நோக்கப் போகின்ற பிரச்சனைகள் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்க்கலாம்