நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காணும் விருச்சிக ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காணும் விருச்சிக ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உற்சாகமாக செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். நீங்கள் எண்ணியது நிறைவேறும். பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். உங்கள் முயற்சியில் ஆதாயம் உண்டாகும். கார்த்திகை 1: துணிவுடன் செயல்படுவீர்கள். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னைகள் பற்றி பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபார முயற்சியில் வெற்றி உண்டாகும். உங்களுக்கேற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். திருவாதிரை: வெளியூர் பயணம் லாபமாகும். உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் செயல் லாபமாகும்.

கடகம்

புனர்பூசம் 4: செயலில் கூடுதல் கவனம் செல்லும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பூசம்: சிந்தித்து செயல்படுவீர்கள். சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சீராகும். 

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.பூரம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். உங்கள் முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். உத்திரம் 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். சிலர் குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். அஸ்தம்: முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும். அந்நியர்களால் சில சங்கடம் ஏற்பட்டு விலகும்.சித்திரை 1,2: தொழிலில் உண்டான பிரச்னைகள் தீரும். உங்கள் முயற்சி நிறைவேறும். 

துலாம்

சித்திரை 3,4: வாகனத்தால் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.சுவாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். உங்கள் முயற்சியில் இழுபறி ஏற்படும்.விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் உண்டான நெருக்கடி தீரும். 

விருச்சிகம்

விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும். அனுஷம்: நண்பர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும்.கேட்டை: நீங்கள் விரும்பியதை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். 

தனுசு

தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பண வரவால் சங்கடங்கள் தீரும்.உத்திராடம் 1: திருமண வயதினருக்கு வரன் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைகளை விலக்கி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1,2: பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.சதயம்: உங்களை சங்கடப்படுத்தும் வகையில் சில செயல்கள் இன்று நடந்தேறும். அனைத்திலும் கவனம் தேவை.பூரட்டாதி 1,2,3: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்படுங்கள். 

மீனம்

பூரட்டாதி 4: தடைபட்டிருந்த முயற்சி நண்பர்கள் உதவியுடன் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும்.உத்திரட்டாதி: குடும்பத்தினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்துசேரும். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.