துலா ராசியினருக்கு விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
துலா ராசியினருக்கு விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். பரணி: உங்கள் செயல் ஆதாயத்தை உண்டாக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.ரோகிணி: அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: செயல்களில் லாபம் காண்பதற்காக நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பூசம்: பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகும். பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம்: சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்

மகம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

கன்னி

உத்திரம் 2,3,4: வருமானத்தை அதிகரிப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். அஸ்தம்: நினைத்தவற்றை இன்று அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும். தொழிலை விரிவு செய்வீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: வெளியூர் பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் தாமதமாகும். சுவாதி: விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். விசாகம் 1,2,3: குடும்பத்திற்காக திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். அனுஷம்: சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.பூராடம்: வழக்கமான வருமானம் தடையின்றி வரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: வியாபாரிகள் தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தினால் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம்: எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் உண்டான நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1,2: பெரியோரின் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உடல்நிலையில் சில சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். சதயம்: வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: முயற்சிகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் செயல்கள் லாபமாகும்.உத்திரட்டாதி: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள். அலுவலக பிரச்னை தீரும். ரேவதி: தடைபட்டிருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.