மேஷ ராசியினருக்கு இறை வழிபாடு அதிகம் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மேஷ ராசியினருக்கு இறை வழிபாடு அதிகம் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். வரவு செலவில் நெருக்கடி ஏற்படும்.பரணி: விசேஷங்களில் பங்கேற்பீர். குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். மகிழ்ச்சி நிறைந்த நாள்.கார்த்திகை 1: எதிர்பாராத பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை. 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4:உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். அலைச்சல் உண்டாகும். செலவு அதிகரிக்கும் நாள்.ரோகிணி: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.யோகமான நாள்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்பில் தாமதம் ஏற்படும். உழைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.திருவாதிரை: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் நாள்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.பூசம்:உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடை உண்டாகும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர். 

சிம்மம்

மகம்:கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: திட்டமிட்டு செயல்படும் வேலை வெற்றியாகும். அலைச்சல் உண்டாகும். விழிப்புடன் செயல்படுவீர்கள்.உத்திரம் 1: வேலைபளு அதிகரிக்கும். மற்றவர் செயல் உங்களை சங்கடப் படுத்தும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நிதானம் தேவை. உங்கள் முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் செயல் நிறைவேறும்.சித்திரை 1,2: உங்கள் திறமை வெளிப்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

துலாம்

சித்திரை 3,4: போட்டியாளர்களால் சில நெருக்கடி தோன்றும். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி காண்பீர்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு செயல் லாபமாகும். விசாகம் 1,2,3: பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மதிப்பும், செல்வாக்கு உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: சிந்தித்து செயல்பட்டு லாபமடையும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். அனுஷம்: விசேஷங்களில் பங்கேற்பீர். வியாபார முயற்சியில் குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களை உற்சாகப்படுத்தும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். 

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ள கடுமையாக உழைப்பீர். இறைவழிப்பாட்டில் மனம் செல்லும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை அடைவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பதில் தடை தோன்றும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். இருந்தாலும் முயற்சி இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். திருவோணம்: திறமை வெளிப்படும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்.அவிட்டம் 1,2:புதிய வாய்ப்பு தேடி வரும். யோசித்து முடிவெடுப்பது நல்லது. விழிப்புணர்வு தேவையான நாள்.

கும்பம்

அவிட்டம் 3,4: செயல்களில் நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும்.சதயம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். உங்கள் வார்த்தைக்கு வெளியிடத்தில் மதிப்புண்டாகும்.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

மீனம்

பூரட்டாதி 4: மனதில் இருந்த குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். கோயில் வழிபாட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். ஒரு பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.ரேவதி: முயற்சி லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.