சில அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது: ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 week ago
சில அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது: ஜனாதிபதி

நட்டமடையும் அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாதென்றும் நரகத்தில் ஓய்வு நிலையில் உள்ளோம். வரலாற்றில் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவதா? அல்லது தியாகிகளாக அடையாளப்படுத்தப்படுவதா ? என்பதை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 ஜனாதிபதி பாராளுமன்றில் மேலும் உரையாற்றுகையில், முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும் அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாகவும் நாடு தீ பற்றி எரியும் போது நாட்டுக்காக நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றேன். எனது தீர்மானங்கள் வெற்றிப் பெற்றுள்ளன.

 நட்டமடையும் அரச நிறுவனங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இயலுமான வகையில் நிவாரணம் வழங்குவோம், இதற்காக 12 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளேன். சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டுக்குள் நிறைவு பெறும். 

மறுசீரமைப்புக்களால் நாட்டின் நிதி நிலைமை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளன. அரச செலவுகள் 20 சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3 சதவீதத்தால் உயர்வடையும் என்று மேலும் தெரிவித்தார்.