அநுர குமாரவிற்கும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இடையில் சந்திப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
அநுர குமாரவிற்கும்  ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் Mark Andrew Fench மற்றும் தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்திப்பு இன்று (09.05) பிற்பகல் ஜனதா விமுக்தி பெரமுனவின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது.  

ஐக்கிய நாடுகளின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆலோசகர்  பேட்ரிக் மெக்கார்த்தி, சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர்  நெத்மினி மடவல, தேசிய மக்கள் படையின் தேசிய செயற்குழு உறுப்பினர்  விஜித ஹேரத் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 

இச்சந்திப்பில், இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க விதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.

 தேசிய மக்கள் படை தனது அரசியல் கலாச்சாரம் ஆரம்பத்திலிருந்தே நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை வலியுறுத்தியது. இந்தப் பிரேரணைகளுக்குப் பிரதிநிதிகள் தமது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.