07.12.2021 இன்றைய ராசி பலன்

Rehaat month ago

மேஷம்: 
அசுவினி: உங்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கலாம். சொத்து வாங்கும் முயற்சி கைகூடும்.
பரணி: சகோதர, சகோதரி வாழ்வில் உயர்வு காண்பர். சேமிப்பு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். யோகமான நாள்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: பணி, தொழில் சுமுகமாக நடக்கும். நிம்மதி அதிகமாகும்.
ரோகிணி: மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். நட்பு வட்டம் விரியும்.
மிருகசீரிடம் 1,2: நிதி நிலை மேம்படும். பேச்சினால் நன்மை அதிகரிக்கும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: மற்றவர்களோடு இருந்த விரோத மனப்பான்மை நீங்கும்.
திருவாதிரை: குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும். உழைப்பினால் ஆதாயம் பெறுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: எடுத்துக் கொண்ட விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கடகம்: 
புனர்பூசம் 4: அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. குதுாகலமான நாள்.
பூசம்: திடீர் நன்மைகளை எதிர்பார்க்கலாம். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
ஆயில்யம்: இன்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். புதிய வேலை கிடைக்கும்.

சிம்மம்: 
மகம்: கடினமாக உழைத்து பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
பூரம்: சிலருக்கு வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பும், பதவி உயர்வும் கிடைக்கும்.
உத்திரம் 1: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகள் வெற்றி பெறும்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
அஸ்தம்: எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். குடும்பத்தினர் நன்மை அடைவர்.
சித்திரை 1,2: நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு சாதகமான பதில் வரும்.

துலாம்: 
சித்திரை 3,4: சிலருக்கு எதிர்பார்த்தபடி குழந்தை பாக்கியம் கைகூடி வரும்.
சுவாதி: கோயில்களுக்கு செல்வீர்கள். தள்ளிப்போன சுபவிஷயம் இன்று நடக்கும்.
விசாகம் 1,2,3: குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும். மன நிறைவு ஏற்படும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு சந்தோஷத்தையும், வருமானத்தையும் தரும்.
அனுஷம்: வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
கேட்டை: மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். நட்பு வட்டம் விரிவடையும்.

தனுசு: 
மூலம்: பதவி உயர்வு பெறுவது பற்றிய செய்தி வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூராடம்: பணியிடத்தில் சகஊழியர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் விலகும்.
உத்திராடம் 1: நீண்ட நாள் பிரச்னை ஒன்று தீரும். விரயங்கள் சுபமாக மாறும்.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: பொறாமை காரணமாக யாரோடும் கருத்து வேற்றுமை வேண்டாம்.
திருவோணம்: கோபம், மனஅழுத்தம் இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1,2: அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: கடனை வசூலிப்பதில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சதயம்: பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று அதிக முதலீடு செய்ய வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: கவனமாக வாகனம் ஓட்டுங்கள். நேர்மையற்ற செயல் எதிலும் ஈடுபடாதீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: அழகிய வாகனம் வாங்கும் முயற்சி இன்று வெல்லும்.
ரேவதி: இன்று செய்யும் செலவுகள் சந்தோஷம் தரும். பண முடக்கங்கள் தீரும்.