யாழில் உயிரிழந்த தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க இறுதி மரியாதை!

#Sri Lanka #sri lanka tamil news #Sri Lankan Army #Lanka4 #Death
Nilaat month's ago

யாழ். – கீரிமலையில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலத்துக்கு 21 வேட்டுக்கள் முழங்க இன்று மரியாதை செலுத்தப்பட்டது.

அவர் கடந்த 1958 ஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை கீரிமலையில் உள்ள தனது இல்லத்தில் உயிர் பிரிந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. அதன்பின்னர் கீரிமலை இந்து மயானத்தில் 21 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்க இராணுவ மரியாதையுடன் அவரது உடல் தீயில் சங்கமமானது.

இந்த இறுதி நிகழ்வில் யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, இராணுவப் படைப்பிரிவு அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.