மலாவியில் பிரெட்டி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி

#Malawi #Land_Slide #Cyclone #Death #world news #Tamilnews #Lanka4
Prasuat day ago

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியை பிரெட்டி புயல் புரட்டி போட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. 

இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ரோடுகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதனால் போக்கு வரத்து முற்றிலும் முடங்கி விட்டது. 

பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு மலைக்கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் அங்கிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இதில் சிக்கி 32 பேர் இறந்தனர். 18 பேரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. 

இந்த நிலச்சரிவால் அந்த கிராமமே அழிந்து விட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கிறது. 

மலாவி நாட்டை உலுக்கிய புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.